கோழி இறைச்சி விற்பனை செய்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்
சம்மாந்துறையில் கோழி இறைச்சி விற்பனை செய்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கோழி இறைச்சி பல்வேறு விலைகளில் விற்பனை செய்வது தொடர்பில் ஆராயும் கூட்டம் அம்பாரை மாவட்ட பாவனையாளர் அலுவலக அதிகார சபையின் பங்குபற்றலுடன் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் பிரதேச சபையின் பிரதான அலுவலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (2023.10.13) இடம்பெற்றது.
இதில் அம்பாரை மாவட்ட பாவனையாளர் அலுவலக அதிகார சபையின் ஆய்வு உத்தியோகத்தர் எம்.எம்.இர்சாத், சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் (GN) எம்.எல். தாசீம், பொதுச் சுகாதர பரிசோதகர் சீ.வீ.எம்.ஹனீபா, பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், கோழிக்கடை உரிமையர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.