PSDG வேலைத்திட்டத்தின் கீழ் நீர் தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன
கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை பிரதேச சபையினால் சென்னல்கிராமம் -02 பிரதேசத்தில் வசதியற்ற குடியிருப்பாளர்களுக்கான நீர்த்தாங்கிகள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் பாத்திம்மா பாலர் பாடசாலை வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இக்கிராமம் அமைந்துள்ள பிரதேசம் மிகவும் உயர்ந்த, வறண்ட பிரதேசமாக காணப்படுவதினாலும் குடிநீரானது நள்ளிரவு 12 மணிக்கு பின்னறான வேலையில் மிக வேகமாகவருதை கவனத்தில் கொண்டு குடிநீரை சேகரித்து வைத்து அருந்துவதற்காகவும், அன்றாட செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் நோக்குடன் உள்ளுராட்சி அமைச்சின் மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட மாகாண நன்கொடை வேலைத்திட்டத்தின் (PSDG) கீழ் வசதியற்ற 62 குடும்பங்களுக்கு 1000 லீற்றர் நீர் தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.