10/11/2023
விழிப்புணர்வுக் கருத்தரங்கு
sammanthurai
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட செயலகம் சம்மாந்துறை பிரதேச சபையுடன் இணைந்து சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கு ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார மற்றும் புலன் விசாரணை அதிகாரிகளான முஹம்மட் ஸாஜீத் ஸமான், எம்.எச்.எம்.றிபாஜ் ஆகியோர் பிரதான வளவாளராக கலந்து கொண்டு, வியாபார செயற்பாடுகளின் போது வர்த்தகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட, ஒழுங்குகள், விதிமுறைகள் மற்றும் நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள அரசாங்க கட்டுபாட்டு விலைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.
இதன்போது வர்த்தகர்களினால் எழுப்பப்பட்ட வினாக்கள் மற்றும் சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், நுகர்வோர் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி எம்.எம் நியாஸ், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.