COUNCIL INFORMATION
Secretary
0672030802
இலங்கை வரலாற்றில் உள்ளுர் நிருவாகங்கள், மன்னர்களாலும் ஐரோப்பியர்களாலும் பற்பல நிருவாக அலகுகளால் பரிபாலிக்கப்பட்டுள்ளமையை அறிவோம். மக்களின் அன்றாட பணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக 1925ஆம் ஆண்டளவில் “சுகாதார சபைகள்” (Sanitary Board) தேசாதிபதியால் நியமிக்கப்பட்டது.
பட்டின சபை
1947ஆம் ஆண்டின் சோல்பரி அரசியல் யாப்பில் சீர்திருத்தப்படி இலங்கையின் சுதந்திரத்திற்கு வழிவகுத்தது. அதன் பிரகாரம் தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன. அத்துடன் உள்ளுராட்சி சபைகளும் அமைக்கப்பட்டன. சம்மாந்துறை, கல்முனைத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டது. உள்ளுராட்சி சபைகளான கிராம சபை, பட்டின சபை, நகரசபை, மாநகர சபை என்று நிர்ணயிக்கப்பட்டன. அந்த வகையில் கல்முனை, சம்மாந்துறை மாத்திரம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள (இன்றைய அம்பாரை மாவட்டத்திலுள்ள) பட்டின சபைகளாக இயங்கின.
கிராம சபை
சோல்பரி அரசியல் யாப்பின் பிரகாரம் கிராம சபைகள் உருவாக்கப்பட்டன. 1968ஆம் ஆண்டில் உள்ளுராட்சி சபைகளின் மீள் எல்லைப் பிரிவுகளின் பிரகாரம் நாவிதன்வெளி, மல்வத்தை, சம்மாந்துறை என மூன்று கிராம சபைகளாக அமையப் பெற்றன. இதன் மூலம் சம்மாந்துறை ஒரு பட்டின சபையாகவும், ஒரு கிராம சபையகவும், செயற்படத் தொடங்கின.
பிரதேச சபைகள்
1988.10.01ஆம் திகதி முதல் பிரதேச சபைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் உள்ளுராட்சி நிருவாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படலாயின.
பட்டின சபை முறை முற்றாக நீக்கப்பட்டு, கிராம சபையும் நீக்கப்பட்டு, பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை என மூன்று பிரிவுகளாக்கப்பட்டன. சம்மாந்துறை பட்டின சபை நகர நகர சபையாக உயர்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பட்டின சபை அந்தஸ்து குறைக்கப்பட்டு பிரதேச சபையாக இயங்கத் தொடங்கியது. இவ் ஒவ்வொரு பிரதேச செயலகமும் ஒரு பிரதேச சபை என்ற திட்டத்தால் சம்மாந்துறை பட்டின சபை, நாவிதன்வெளிக் கிராம சபை, மல்வெத்தைக் கிராம சபை, இறக்காமம் கிராம சபை, சம்மாந்துறை கிராம சபை ஆகிய ஐந்து தனித்தனி உள்ளுராட்சி சபைகளும் இணைந்ததான “சம்மாந்துறை பிரதேச சபையாக” நடைபெறலாயிற்று. சம்மாந்துறை பட்டின சபைக் காரியாலயம் பிரதேச சபைக் காரியாலமாக இயங்கத் தொடங்கியது. ஏனைய நான்கு கிராம சபைக் காரியாலயங்களும் உப பிரதேசக் காரியாலயங்களாகப் செயற்பட்டன.
தற்போது இறக்காமம், நாவிதன்வெளி என்பன தனித்தனி பிரதேச செயலகங்களாக செயற்படுவதால், சம்மாந்துறையின் பிரதேச சபையின் எல்லைக்குள் சுருங்கி விட்டது எனலாம்.
Chairman’s name
Year
Hon. U.M.Sulaimalebbe
1947 - 1949
Hon. U.M. Uthumalebbe
1950 - 1952
Hon. M.A. Lathiff
1953-1955
Hon. M.A. Abdul Majeed
1956 - 1961
Hon. M.A. Amir Ali
1962 - 1968
Hon. M.Z.K.M. Kariyappar
1969 - 1970
Hon. U.L.M.Mohaideen
1994 April, May
Hon. I.M. Ibrahim
1994 - 1999
Hon. M.I.M. Mansoor
2006 - 2011
Hon. A.M.M. Naoshaad
2011 - 2015
Hon. A.M.M. Naoshaad
2018 - 2023.01.10
Hon. I.L.M. Mahir
2023.02.14 - 2023.03.19
சம்மாந்துறை பிரதேச சiயின் பொதுவான தகவல்கள்
ஆரம்ப விபரம்
1.1 மாகாணம் : கிழக்கு மாகாணம்
1.2 மாவட்டம் : அம்பாறை
1.3 தேர்தல் மாவட்டம் / தொகுதி : திகாமடுல்ல / சம்மாந்துறை
1.4 பிரதேச செயலாளர் பிரிவு : சம்மாந்துறை
1.5 உள்ளுராட்சி நிறுவனத்தின் பெயரும் விலாசமும் : சம்மாந்துறை பிரதேச சபை
1.6 தற்போதைய சபை உருவமைத்த திகதி : 2018.03.27
1.7 தற்போதைய சபை உறுப்பினர் எண்ணிக்கை : 20
1.8 தற்போதைய சபை முடிவடைந்த திகதி : 2023.03.19
1.9 ஆரம்ப உள்ளுராட்சி நிறுவனம் : பட்டினசபை -1947 இல்
1.10 நிர்வாக பிரதேசத்தின் பிரதான நகரம் : சம்மாந்துறை
1.11 உள்ளுராட்சி நிறுவனத்தின் பிரதான காரியாலயத்திலிருந்து
பிரதான நகரத்திற்கு இடையிலான தூரம் : 0.5 (கி.மீ.)
1.12 தொலைபேசி இலக்கம் / இலக்கங்கள் :
I. கௌரவ தவிசாளர் : 0672260178
II. பொது அலுவலகம் : 0672260043
1.13 தொலைநகல் இலக்கம் : 0672260235
1.14 மின்னஞ்சல் முகவரி : strps2009@yahoo.com,
pssammanthurai@gmail.com
1.15 இணைய முகவரி : www.sammanthurai.ps.gov.lk
1.15 சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட
உப காரியாலயங்களின் எண்ணிக்கை : 01
1.16 உப காரியாலயம் பற்றிய விபரம் : மல்வத்தை உப அலுவலகம், மல்வத்தை
2.0 உள்ளுராட்சி நிறுவனத்தின் நிர்வாக எல்லைக்குள் உள்ள பௌதீக விபரங்கள்
2.1 நிர்வாகப் பிரிவின் பரப்பளவு (வ.கி.மீ) : 132.8 sqkm
2.2 நிர்வாகப் பிரதேசத்திற்குரிய கிராம சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை : 51
2.2.1 கிராமங்களின் எண்ணிக்கை : 30
2.3 கடல் மட்டத்திலிருந்து உயரம் (மீட்டர்) ஆகக் கூடிய உயரம் (மீட்டர்) : 27 M
ஆகக் குறைந்த உயரம் (மீட்டர்) : 09 M
2.4 இடத்தின் தன்மை : சமதரை,மலைப்பிரதேசம்
2.5 குறுக்குக் கோடு அமைவிடம் : 07” 20”
2.6 நெடுங்கோடு அமைவிடம் : 81” 45”
2.7 அதிகாரப் பிரதேசம் கொண்டமைந்த
(குளிர் பிரதேசம்ஃவரண்ட பிரதேசம்ஃஇடைப்பட்ட பிரதேசம்) : இடைப்பட்ட பிரதேசம்
2.8 வருடாந்த பொதுவான மழைவீழ்ச்சி : 1500 mm - 1750 mm
2.9 வருடத்தின் பொதுவான வெப்பம் (பரனைட் இலக்கம்) : 80.60 - 86 F
பொதுவான விபரங்கள்
01. சனத் தொகை : 78707
02. குடும்பங்கள் : 22481
03. ஊழியர்களின் எண்ணிக்கை (அலுவலகம்) : நிரந்தரம் - 88 பதில் - 83
04. சபையினால் நிர்வாகிக்கப்படும் உப நிறுவனங்கள் : 30
05. சபைக்குரிய வாகனங்களின் எண்ணிக்கை : 37
06. ஏனையவை
I. ஒவ்வொரு வகுப்பிலுமுள்ள வீதிகளின் எண்ணிக்கை
a. Tar roads : 22.929 km
b. Asphat roads : 14.175 km
c. Concrete surface roads : 99.558 km
d. Block Paving roads : 4.827 km
e. Gravel roads : 125.497 km
f. Earth/ Sand roads : 42.308 km
Total Roads : 309.294 km
II. வடிகான்களின் நீளம் : 64 கி.மீ
III. கற்பினித் தாய்மார், குழந்தை சிகிச்சை நிலையம் : 06
IV. சனசமுக நிலையங்களின் எண்ணிக்கை : 19
V. ஆரம்ப பாடசாலைகளின் எண்ணிக்கை : 80
VI. சபையினால் நிர்வகிக்கப்படும் ஆரம்ப பாடசாலைகள் : 03
VII. பாடசாலைகளின் எண்ணிக்கை : 37
VIII. பொது நூலகங்கள் : 04
IX. நூல்கள் வாசிக்கும் நிலையங்கள் : 05
X. அறிவகம் : 03
XI. பொது விளையாட்டு மைதானம் : 05
XII. பொதுச் சந்தைகள் : 03
XIII. வாராந்த சந்தை : 01
XIV. மயாண பூமிகள் : 15
XV. சிறுவர் பூங்கா : 05
XVI. சேதனப் பசளை தயாரிக்கும் நிலையம் : 01
XVII. பொதுக் கிணறு : 08
XVIII. வியாபார வரி தொடர்பான நிலையங்கள் : 1178
XIX. பஸ்தரிப்பு நிலையம் : 15
XX. நகர மண்டபங்கள்ஃகூட்டம் கூடும் நோக்கத்திற்கான மண்டபம் : 04
XXI. வாடகைக்குக் கொடுக்கப்படும் சந்தைகள் கடைகள் : 116
XXII. கொல்களம் : 01
XXIII. தெரு விளக்கு : 3920 - 4000
XXIV. நாளாந்தம் சேகரிக்கப்படும் கழிவுகளின் அளவு : 26 தொன் - 29 தொன்