12/01/2024
வெள்ள காலத்தில் வீதியினால் பயணிக்க சிரமப்பட்ட மக்களுக்கு நீரைக் கடக்க உதவி செய்தபோது
கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. அத்துடன் சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் மல்கம்பிட்டி நெய்னாகாடு பிரதான வீதியின் மயிலோட வயல் பிரதேசத்தில் வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்தோடி வருகின்றது.
இதன்காரணமாக இவ்வீதியூடாக பயணிக்கும் மக்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றமை கவனத்தில் கொண்டு சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் பணிப்புரைக்கமைய பிரதேச சபையின் உழவு இயந்திரத்தின் மூலம் இன்று காலை (12) நீரை கடந்து செல்லும் மக்களை ஏற்றிகொண்டு விட்டபோது.
பெரிய கொக்க நார வட்டையின் சுருப்போடை முந்தல் பாலத்திற்கு அருகில் செல்லும் வீதி உடைந்துள்ளமையை நேரில் சென்று பார்வையிட்டனர்.