18/01/2024
வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை திருத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது
சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்ட பிரதேசங்களில் வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை ஒரளவு மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு கனரக வாகனத்தின் உதவியுடன் திருத்தும் வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இவ்வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் நேரடி கண்காணிப்பில் வெள்ளத்தினால் சேதமடைந்து உடைந்து குன்றும், குழியுமாக காணப்பட்ட வீதிகள் உழவு இயந்திரத்தினால் மண் நிரப்பி கனரக வாகனத்தின் உதவியுடன் ஒரளவு மக்கள் பயன்படுத்தும் வீதிகளாக சீர்செய்யப்பட்டது.
இதன்போது மல்வத்தை தம்பிநாயகபுரம் பிரதான வீதி, தம்பிநாயகபுரம் அழகப்பா வீதி, தம்பிநாயகபுரம் அழகப்பா குறூக்கு வீதி, தம்பிநாயகபுரம் மத்திய வீதி, மல்வத்தை கோவில் அருகிலுள்ள வீதி, சென்னல் கிராமம் புளியடி குறூக்கு வீதி, நெய்னாகாடு வீரையடிக்கட்டு ஆகிய வீதிகள் சீர்செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.