சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ஊர்ப் பகுதிக்குள் வந்திருந்த ஆற்றுவாழை, கழிவுகள் மற்றும் வெள்ளம் வடிந்த பிற்பாடு வீடுகளில் சேர்ந்த கழிவுகளை அகற்றும் பணிகள் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் நேரடி கண்காணிப்பில் கனரக வாகனத்தின் உதவியுடன் ஊழியர்களினால் இன்று சனிக்கிழமை (30) முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது அலவக்கரை வீதி, வீரமுனை சிறுவர் பூங்கா வீதி, RKM பாடசாலையின் கரையோர வீதி மற்றும் வடிகான் என்பன சுத்தப்படுத்தப்பட்டு மக்களின் அன்றாட போக்குவரத்துக்கு ஏற்பட்டிருந்த இடையூறுகள் நீக்கப்பட்டன.