வீதிக்கு குறுக்காக முறிந்துகிடந்த மரங்களை வெட்டி அகற்றுதல்
சீரற்ற காலநிலை காரணமாக சம்மாந்துறை பிரதேசத்தில் பல மரங்கள் விழுந்தமையினால் வீதிப் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டதுடன், மின்சார துண்டிப்பும் ஏற்பட்டன. இம்மரங்களை அகற்றும் பணிகள் இன்று சம்மாந்துறை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை கல்முனை பிரதான வீதியின் நெல்லுப்பிட்டி சந்திக்கு அருகாமையில், அம்பாரை பிரதான வீதியில், வண்டு வாய்க்கால் சந்தியில், ஜலாலியா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு அருகாமையில், கல்லரிச்சல் பிரதேசம் போன்ற பிரதேசங்களில் பல மரங்கள் விழுந்து வீதிப் போக்குவரத்துக்கு தடையேற்பட்ட மரங்களை அகற்றும் பணிகள் மழையென்றும் பார்க்காமல் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினர் கனரக வாகனத்துடன் நேரடியாக சென்று மரங்களை வெட்டி அகற்றி பொதுபோக்குவரத்தை சீர்செய்த போது…