05/03/2024
வாசிப்பு நிலைய திறப்பு விழா
சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள வளத்தாப்பிட்டி நாவலர் வாசிப்பு நிலைய திறப்பு விழா புதிய வளத்தாப்பிட்டி நாவலர் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று (04) இடம்பெற்றது.
இதில் அம்பாரை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வாசிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுக்கு விசேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களும், கெளரவ அதிதியாக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி.எம்.எஸ்.வீ.மௌலானா அவர்களும், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபையின் உபதவிசாளர் வீ.ஜெயச்சந்திரன், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் கே.குலமணி, நூலகர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், புதிய வளத்தாப்பிட்டி நாவலர் சனசமூக நிலைய முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது இவ்வாசிப்பு நிலையத்திற்கு அம்பாரை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி அவர்களினால் ஒரு தொகுதி நூல்களும் கையளிக்கப்பட்டது.