29/01/2024
போதை ஒழிப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக “யுக்திக்கான சக்தி” எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிகாட்டலில் அரசாங்கத்தின் யுக்திய போதை ஒழிப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக “யுக்திக்கான சக்தி” எனும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கமைய அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களில் போதைப் பொருளுக்கு அடிமையானர்வர்களை மீட்க்கும் நோக்கில் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டிட தொகுதியில் ஏழு தினங்களாக பயிற்சியளிக்கப்பட்டு உள ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தி தாய் தந்தை, மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்பத்துடன் சந்தேசமாக வாழ்வதற்கு வழிகாட்டல் வழங்கி உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (27) இடம்பெற்றது.
இந்நிகழ்வு அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஸாட் , பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், வர்த்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் 49 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உறவினர்களிடம்