பொதுப்பாதைகளில் விழக் கூடிய ஆபத்தான மரங்கள், மரக்கிளைகளை அகற்றும் பணிகள்
கல்லரிச்சல் வீதியோரங்களில் அசாதாரண காலநிலை மற்றும் வெள்ள அனர்த்தங்களின் போது பொதுப்பாதைகளில் விழக் கூடிய ஆபத்தான மரங்கள், மரக்கிளைகளை அகற்றும் பணிகள் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் நேரடி கண்காணிப்பில் எமது சபையின் ஊழியர்களினால் இன்று சனிக்கிழமை (2024.11.30) மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
இதன்போது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களும் நேரடியாக வருகை தந்து மரம் வெட்டும் பணிகளையும் பார்வையிட்டார்.