பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு அம்பாரை நகரம் சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்களினால் சுத்தம் செய்யப்பட்ட போது.
பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு அம்பாரை நகரில் இவ்வருடம் பொசன் அலங்கார வலயம், தோரணங்கள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றமையினால் அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி அவர்களின் பணிப்புரைக்கமைய அம்பாரை நகரின் பிரதான வீதியின் இறக்காம சந்தியிலிருந்து (SawMill) பிள்ளையார் கோவில் வரையான வீதியின் ஒரு பகுதி முழுமையாக சுத்தம் செய்யும் பணியை சம்மாந்துறை பிரதேச சபைக்கு (2024.06.21) வெள்ளிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையான ஐந்து தினங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச சபை ஊழியர்களினால் இன்று சனிக்கிழமை (2024.06.22) அம்பாரை நகர் பிரதான வீதி சுத்தம் செய்யப்பட்ட போது.