வளத்தாப்பிட்டி நாவலர் சனசமூக நிலையமும், வீனஸ் விளையாட்டுக்கழகமும், சம்மாந்துறை பிரதேச சபையுடன் இணைந்து நடாத்திய தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழா சனிக்கிழமை (20) வளத்தாப்பிட்டி பொது மைதானத்தில் இடம்பெற்றது.
முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கலை கலாச்சார பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளையும் ஆராம்பித்து வைத்துடன் வெற்றியீட்டிய வீரர்களுக்கு பரிசுப்பொதிகளையும் வழங்கி வைத்தார்.