பிரதேச சபையில் கடமையாற்றும் சாரதிகளுக்கான விசேட கலந்துரையாடல்
சம்மாந்துறை பிரதேச சபையில் கடமையாற்றும் சாரதிகளுக்கான விசேட கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் பிரதான அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது.
இதன் போது நாளாந்தம் மேற்கொள்ளப்படும் திண்மக்கழிவு அகற்றலில் ஏற்படும் பிரச்சினைகள், குப்பைகளை தரம் பிரித்து அகற்றுதல் மற்றும் குப்பைகளை கொட்டும் இடம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.