சம்மாந்துறை பிரதேச சபையின் வெளிகள ஊழியர்களுக்கான ஒன்றுகூடல் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் நேற்று புதன்கிழமை அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது காவலாளிகள் ஓய்வு பெற்று செல்லுவதனாலும், புதிதாக காவலாளிகள் நியமிக்க முடியாத அந்த இடங்களுக்கு சுகாதார மற்றும் வேலைத் தொழிலாளிகளை நியமிக்கின்ற போது காவலாளியின் நேரம், தன்மையினை கவனத்தில் கொண்டு சரியாக கடமையை புரிய வேண்டும்.
மேற்பார்வை உத்தியோகத்தர்களினால் பணிக்கப்படும் வேலைகளை செய்ய வேண்டும் அவ்வாறு பணிக்கப்படும் வேலைகளை செய்ய மறுப்பவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இரண்டாம் மொழி சிங்க பாடநெறி வயது அடிப்படையில் கட்டம் கட்டமாக நடைபெற விருப்பதினால் உரியவர்கள் பங்குபற்றுவதுடன் ஏனைய ஊழியர்கள் வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் செயற்பட வேண்டும்.
சாரதிகளுக்கான வினைத்திறமை காண் தடைப் பரீச்சைக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. ஏனைய ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு டிசம்பர் மாதத்திற்குள் எமது சபையினால் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சாரதிகள் எரி பொருட்களை சிக்கணமாக பாவிப்பதுடன், வீன் விரயத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் கடமையாற்றிய ஊழியர்களின் சுய விபரக் கோவையில் அதிகமான குறைபாடுகள் காணப்படுவதினால் ஓய்வூதிய நடவடிக்கையில் தாமதம் ஏற்படுகின்றது. இதனால் தற்போது கடமையிலுள்ள ஊழியர்கள் தங்களது சுயவிபரக் கோவையிலுள்ள குறைபாடுகளை கேட்டரிந்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.
தற்போதைய அரசங்கத்தினால் எதிர் காலங்களில் அலுவலக நடவடிக்கைகளை டிஜிடல் மயப்படுத்த விருப்பதினால் நாமலும் அதற்கு தயராக இருக்க வேண்டும், புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கான சம்பளம் சபையின் நிதியிலிருந்து வழங்கப்படுவதினால் நிதி பற்றக்குறை ஏற்பட்டுள்ளது அதன் காரணமாக ஊழியர்களின் நலன்புரி விடயங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன் நிதி கிடைத்ததும் கட்டம் கட்டமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போன்ற பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.சுல்பா, தொழில்நுட்டப உத்தியோகத்தர் எம். எம்.எம்.முஸ்தபா, மேற்பார்வை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.