01/03/2024
பிரதேச சபையின் மாதாந்த ஒன்று கூடல் மற்றும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களான சேவை பாராட்டல்
சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மாதாந்த ஒன்று கூடல் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் அவர்களின் தலைமையில் நேற்று அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது பிரதேச சபையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களான யூ.எல். அப்துல் மஜீட் (பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்) எஸ்.ரவிச்சந்திரன் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்) கே.சிவவேந்தன் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்) ஏ.ஜே.எப்.பர்சானா (அபிவிருத்தி உத்தியோகத்தர்) என்பவர்களின் சேவையினை பாராட்டி உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் வாழ்த்துக்கள் கூறி கௌரவிக்கப்பட்டது.