பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மாதாந்த கூட்டம்
சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மாதாந்த கூட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
உள்ளுராட்சி மன்றங்களின் செயலாற்றுகை போட்டி Perfect 2.0, Audit Query, Action Plan, Procurement, Budget, Final Accounts, Board Of Survey , அலுவலக நேர முகாமைத்துவம், புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கான வினைத்திறமை காண் தடைப் பரீச்சைக்கான பயிற்சி வகுப்பு நடாத்துதல் உள்ளிட்ட பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் உள்ளுராட்சி சபைகளை வலுவூட்டும் வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தபட்டமைக்கு மற்றும் 2023ம் ஆண்டிற்கான யூ.எல்.எம்.முஹிடீன் பொது நூலகம் தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சித் திட்டத்தை மிக சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திய மைக்காகவும் விருது மற்றும் சான்றிதழ்கள் கிடைக்கப்பட்டது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல உத்தியோகத்தர்களுக்கு செயலாளர் நன்றி தெரிவித்தார்.
இதன்போது யூ.எல்.எம்.முஹிடீன் பொது நூலகத்தில் நூலகராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஏ.கே.ஜெளபர் அவர்களின் சேவையினை பாராட்டி வாழ்த்து கூறி கௌரவிக்கப்பட்டது.