PERFCT 2.1/ செயலாற்றுகை விருத்தி மற்றும் வலுவூட்டல் கருவி 2.0
இலங்கையிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் மாகாண மட்ட செயல்திறன் PERFCT 2.1/ செயலாற்றுகை விருத்தி மற்றும் வலுவூட்டல் கருவி 2.0 என்னும் செயலாற்றுகை கருவி தொடர்பான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (2024.11.08) அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
2023க்கான சம்மாந்துறை பிரதேச சபையின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பது தொடர்பாகவும், கடந்த வருடம் இவ்அறிக்கையில் விடப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் அம்பாரை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம். சாஹிர் அவர்களினால் உத்தியோகத்தர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.