04/02/2024
தேசிய சுதந்திர தின நிகழ்வு
சம்மாந்துறை பிரதேச சபை, மேசன் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து சம்மாந்துறை ஹாட்வேயார் சங்கத்தின் அனுசரணையில் நம்பிக்கையாளர் சபை மற்றும் முஹல்லா மஹல்லா பள்ளிவாசல் நிர்வாகிகளின் பங்குபற்றலுடன் ஏற்பாடு செய்த இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின நிகழ்வு முஹல்லா மஹல்லா பள்ளிவாசல் அப்துல் மஜீட் ஞாபகார்த்த ஜனாஸா மண்டப வளாகத்தில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் இன்று (04) சிறப்பாக இடம்பெற்றது.
தேசியக்கொடி ஏற்றி, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் நினைவு கூறப்பட்டதுடன், மையவாடி வாளாகம் மரங்கள் மற்றும் பற்றைக்காடுகள், புல்பூண்டுகள் வெட்டப்பட்டு தூப்புரவு செய்யப்பட்டது.
இதில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் ஐ.எம் ஹனீபா, சம்மாந்துறை அல் மஜ்லிஸ் அஸ்ஸுரா தலைவர் எம்.ஐ அமீர், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை பொருளாளர் ஏ.எம்.றசீட்,மேசன் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ.வீ.ஹஸன், செயலாளர் எச்.எம்.சல்பியார், சம்மாந்துறை ஹாட்வேயார் சங்கத்தின் தலைவர் எம்.எச்.எம்.ஹாரீஸ், இணைப்பாளர் எச்.எம். சியாட் முகம்மட், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நம்பிக்கையாளர் சபை முக்கியஸ்தர்கள், மேசன் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.