02/05/2024
செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பிலான ஆய்வு கூட்டம்
அம்பாரை மாவட்டத்தில் உள்ள 20 உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக உலக வங்கி மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களினால் அபிவிருத்தி திட்டங்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சுமார் 150 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியை கொண்டுள்ள செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பிலான ஆய்வு கூட்டம் சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் (2024.04.30)இடம் பெற்றது.
அம்பாரை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சகல உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் ஒப்பந்த காரர்கள் போண்றோர் அழைக்கப்பட்டிருந்தனர் குறித்த அபிவிருத்தியானது மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையிலும்அதே போன்று உள்ளூராட்சி மன்றங்களினதும் வருமானத்தை அதிகரிக்கச்செய்யவுமான திட்டங்களை இனங்கண்டு செயற்படுத்தப்பட்டு வருகின்ற இவ்வேலைத்திட்டங்களை துரிதகெதியில் நடைமுறைப்படுத்தி மக்கள் பாவனைக்கு கையளிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்து ஒப்பந்த காரர்களுடனும் செயலாளர்களுடனும் பிரஸ்தாபிக்கப்பட்டு உரிய தீர்வை உள்ளூராட்சி உதவி ஆணையாளரினால் இதன் போது பெற்றுக்கொடுக்கப்பட்டது.