07/08/2024
சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான மருத்துவப் பரிசோதனை
சம்மாந்துறை ஆதார வைத்தியவாலையின் ஆரோக்கிய வாழ்வு நிலையத்தின் அனுசரனையுடன் சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம் 2024.08.07 ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் ஜனாப். எம். ஏ. கே. முகம்மட் தலைமைiயில் சiபின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது ஆரோக்கிய வாழ்வு நிலையத்திற்குப் பொறுப்பான வைத்தியர் திருமதி. எம்.ஐ. நஸீரா அவர்களினால் எமது ஆரோக்கிய வாழ்விற்கான உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் எமது நடவடிக்கைகள் தொடர்பான வழி காட்டல்களும் வழங்கப்பட்டது.