சம்மாந்துறை பிரதேச சபையின் யூ.எல்.எம் முஹிடீன் பொது நூலகம் தேசிய மட்டத்தில் வெற்றி
தேசிய வாசிப்பு மாதம் 2023 சமூகங்களுக்கிடையே புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் இலங்கையில் உள்ள அனைத்து நூலகங்களுக்கிடையிலே முன்னெடுக்கப்பட்ட வேலை திட்டத்தின் பிரகாரம் இலங்கையிலுள்ள சகல நூலகங்களும் இதில் போட்டியிட்டு இருந்தது.
மிகச்சிறந்த முறையில் இச் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்திய நூலகங்களில் ஒன்றாக சம்மாந்துறை பிரதேச சபையின் யு. எல்.எம்.முஹிடீன் பொது நூலகம் தேர்வு செய்யப்பட்டு இதன் விருதினை சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே முஹம்மட் மற்றும் அதன் நூலகர் ஏ.கே ஜெளபர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தேசிய நூலக ஆவணவாக்கள் சபை நாட்டில் உள்ள சகல பொது நூலகங்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நூலகங்கள் இணைந்து பங்கு கொண்ட இந்த நிகழ்ச்சி திட்டத்திம் அரசாங்க அனுசரணையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்த நூலகங்கள் ஒவ்வொரு வருடமும் கௌரவிக்கப்பட்டு வருகின்றது.
இவ் விருதினை ஒரு முறையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு நூலகத்தின் கனவாகும் இம்முறை சம்மாந்துறை பிரதேச சபையின் யூ.எல்.எம் முஹிடீன் பொது நூலகம் அதனை சாதித்துக் காட்டி விருதையும் பெற்றுக் கொண்டது.