சம்மாந்துறை பிரதேச சபையின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை தயாரிப்பதற்கான கலந்துரையாடல்
சம்மாந்துறை பிரதேச சபையின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை தயாரிப்பதற்கான மகளிர் அமைப்புக்கள், சமூக சேவைகள் அமைப்புகள், விசேட தேவையுடையோர்கள், இளைஞர்கள், சனசமூக நிலைய பிரதிநிகள், பெண் தலைமை தாங்கும் குடும்ப தலைவிகளின், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிகளின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் பெறும் கலந்துரையாடல் அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (2024.12.03) இடம்பெற்றது.
சம்மாந்துறை சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்பட்டது.
இதில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் S.A.C.M.S.B.மௌலானா , சம்மாந்துறை பிரதேச சபையின் நிதி உதவியாளர் ஐ.கே.சித்தி நஜீமா, உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.