இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் 2025 ஆம் ஆண்டுக்கான அலுவலக நாற்காட்டி
இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் 2025 ஆம் ஆண்டுக்கான அலுவலக நாற்காட்டியை அச்சிடுவதற்காக உள்ளுராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகள் வரைந்த “ஒரு சிறந்த உள்ளுராட்சி பகுதி ” என்ற தொனிப்பொருளில் சித்திரங்கள் கோரப்பட்டது.
இதற்கமைய எமது சபையில் கடமையாற்றும் திரு எஸ்.ரீ. மூர்த்தி என்பரின் மகனான மல்வத்தை விபுலாந்தா மகா வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி கற்கும் மூர்த்தி முவிஷன் என்பவரினால் வரைந்து அனுப்பட்ட சித்திரம் தெரிவு செய்யப்பட்டு, இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அலுவலக நாற்காட்டியில் பெப்ரவரி மாதத்தில் குறித்த சித்திரம் காட்சி படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாணவனுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.