சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் புதுவருடத்தின் கடமைகளை ஆரம்பிக்கும் உறுதிப்பிரமாண நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காக உயிர்நீத்த படைவீரர்களுக்காக இரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச சபையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.